க்ரைம்

ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புரட்சி பாரதம் நிர்வாகிகள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆள்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புரட்சி பாரதம் கட்சி நிர் வாகிகள் சுவிட் குமார், தேவராஜ் ஆகியோரை கைது செய்து போலீ ஸார் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவா லங்காடு, களம்பாக்கத்தைச் சேர்ந் தவர் தனுஷ். இவர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காத லித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக தனு ஷின் 17வயதுதம்பிகடந்தஜூன்6ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார். இந்த கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னைஉயர்நீதிமன்றத்தில்தாக் கல் செய்த மனு மீதான விசாரணை யின்போது, ஏடிஜிபி-யை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை வேறு அமர் வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த ஜூன் 27-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது. இதையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு மீதான விசா ரணையில், பூவை ஜெகன்மூர்த் திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏடிஜிபியிடம் விசாரணை: இந்த வழக்கு சிபிசிஐடி போலீ ஸாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணை யில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற் கெனவே சிறையில் உள்ள விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் விசாரித்த நிலையில் ஏடிஜிபி ஜெயராமனிடம் விசாரணை நடத் தவும் முடிவு செய்தனர். காஞ்சி பரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் சிபிசிஐடி எஸ்.பி ஜவஹர் தலைமையிலான போலீஸார் அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்திக்கு சம்மன் அனுப் பப்பட்டு கடந்த மாதம் 28-ம் தேதி காஞ்சிபுரம் சிபிசிஐடி சரக அலு வலகத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை நடத் தினார், பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் லாரன்ஸ், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ சுசிலா ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான கடம்பத்தூர் புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய செயலா ளர் இருளச்சேரி சுவீட்குமார், புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் கவுன் சிலருமான டேவிட் (எ) தேவராஜ் தலைமறைவாக இருந்தனர்.

இதையடுத்து, பூந்தமல்லி யில் பதுங்கி இருந்த அவர்களை சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருவள்ளூர் சிபிசிஐடி அலுவலகத் துக்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொள் ளப்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திரு வள்ளூர் நீதிமன்ற முதல் வகுப்பு நடுவர் சுனில் வினோத் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்,

அவர்கள் இருவரையும் ஆக. 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தர விட்டதை தொடர்ந்து இருவரை யும் சிபிசிஐடி போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

5 பேரிடம் 2-ம் கட்ட விசாரணை: மேலும் இந்த வழக்கில் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட் டுள்ள விஜயஸ்ரீ தந்தை வனராஜா உட்பட 5 பேரிடம் இரண்டாவது கட்டமாக விசாரணை நடத்த அனு மதி கேட்டு திருவள்ளூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT