கோப்புப்படம் 
க்ரைம்

ஊர்க்காவல் படை தேர்வுக்கு வந்த பெண் மயக்கம்: ஆம்புலன்ஸில் சென்றபோது பாலியல் வன்கொடுமை

செய்திப்பிரிவு

பாட்னா: ஊர்க்காவல் படை தேர்வின் போது மயக்கமடைந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற இளம் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் கடந்த 24-ம் தேதி ஊர்க்காவல் படை தேர்வு நடைபெற்றது. இதில் உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற 24 வயது இளம் பெண் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து, அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், ஓடும் வாகனத்திலேயே அதிலிருந்த ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என அந்தப் பெண் புகார் செய்துள்ளார்.

உடல் தகுதித் தேர்வின் போது சுயநினைவை இழந்த போதிலும், ஆம்புலன்ஸில் சென்றபோது சற்று நினைவு திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார். இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தனர். விசாரணை நடத்திய அக்குழுவினர், சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஒரு தொழில்நுட்ப ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT