சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமதலா விஜயகாந்தின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக டிஜிபியிடம் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மனு அளித்துள்ளார்.
அதன் விவரம்: தேமுதிக சார்பில் மாநில அளவிலான பிரச்சாரம் வரும் ஆக.3 முதல் ஆக.23-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்காக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்தநிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்தவுள்ளோம்.
இந்த பிரச்சாரமானது காவல்துறையின் வழிகாட்டுதல்களோடு மக்களிடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும். இதற்காக கட்சித் தரப்பிலி ருந்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு காவல் துறைக்கு முழுமையாக வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
எனவே தேமுதிகவின் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கி, பிரச்சாரத்தின் போது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.