நேபாள நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கடந்த சில ஆண்டு களுக்கு முன் வேலை தேடி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்தார். தம்பதி யிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து நேபாள நாட்டை சேர்ந்த நிர்மலா (22) என்பவரை கடந்த 4 மாதத்துக்கு முன் இரண்டாவதாக ராஜேந்திரன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஊட்டி மத்திய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆனதால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.