க்ரைம்

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் காமிக்ஸ் புத்தகத்தில் கடத்தப்பட்ட ரூ.40 கோடி கோகைன் பறிமுதல்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் நேற்று விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.

நேற்று அதிகாலையில் தோஹாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 31 வயதான இளைஞரின் உடைமைகளை பரிசோதித்தனர். அவரது பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் அதிக கனம் கொண்ட 2 காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன.

அதன் அட்​டையை பிரித்து சோதித்தபோது, அதில் கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 புத்​தகங்​களை​யும் முழு​மை​யாக பிரித்து எடுத்​து,
4.06 கிலோ கோகைன் போதை பொருளை பறி​முதல் செய்​தனர். இதன் சர்​வ​தேச சந்தை மதிப்பு சுமார் ரூ.40 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் சம்​பந்​தப்​பட்ட தோஹாவை சேர்ந்த இளைஞர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்​டத்​தின்​ கீழ் வழக்கு பதிவு செய்​தனர். வழக்​க​மான மருத்​துவ பரிசோதனைக்கு பின்​னர், நேற்று பிற்​பகல் பெங்​களூரு மாநகர அமர்வு நீதி​மன்​றத்​தில் ஆஜர்படுத்​தினர். நீதி​மன்​றத்​தில் 3 நாட்​கள் காவலில் எடுத்து அந்த இளைஞரிடம்​
வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT