க்ரைம்

சென்னை | மெத்தம்பெட்டமைன் கடத்தல் ஐ.டி ஊழியர்கள் 4 பேர் உள்பட 7 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மெத்தம்பெட்டமைன் கடத்தலில் ஈடுபட்டதாக ஐ.டி ஊழியர்கள் 4 பேர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப் படை போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து கண்காணிக் கின்றனர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் போலீஸார், வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை செய்த போது, மெத்தம்பெட்ட மைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபர்களான திருநெல்வேலி சூர்யபாரதி (28), சென்னை சாலிகிராமம் கண்ணன் (35), செம்மஞ்சேரி ராம்குமார் (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விருகம் பாக்கம் பிரதீப் (36), கோடம்பாக்கம் சரவணகுமார் (27), புழுதி வாக்கம் கவுதம்ராஜ் (29), ரவீந்திரன் (28) ஆகிய மேலும் 4 பேரைக் கைது செய்தனர்.

போதை பொருட்கள் பறிமுதல்: அவர்களிடமிருந்து 22 கிராம் மெத்தம்பெட்ட மைன், 4 கிராம் உயர் ரக கஞ்சா, 9 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப் பட்டன. போலீஸ் விசாரணை யில், சூர்யபாரதி, கண்ணன், கவுதம் ராஜ் மற்றும் ரவீந்திரன் ஆகிய 4 பேரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ராம்குமார், பிரதீப் ஆகிய இருவரும் சொந்தமாக தொழில் செய்து வருவதும் மற்றும் சரவணகுமார் ஓட்டுநர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

அதிக விலைக்கு விற்பனை: இவர்கள், ஐ.டி ஊழியர்கள், சினிமா துறை யினர் மற்றும் வசதி படைத்தவர்களைக் குறிவைத்து அதிக விலைக்கு போதை மருந்தை விற்பனை செய்து வந்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT