சென்னை: தருமபுரியைச் சேர்ந்த நிசார் அகமது என்பவரின் மகளுக்கு, 2013-ம் ஆண்டு தனி யார் மருத்துவக் கல்லூரியில் 'சீட்' பெற்று தருவதாகக் கூறி போக்குவரத்துத் துறை துணை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ், ரூ.50 லட்சம் பெற்றுள்ளார்.
ஆனால், 'சீட்' வாங்கித் தராததால் பணத்தை திருப்பி கேட்டபோது, இரண்டு காசோலைகளை மோகன்ராஜ் வழங்கியுள்ளார். அவை பணம் இல் லாமல் திரும்பி வந்ததால், மோகன்ராஜ் மற்றும் அவரை அறிமுகப்படுத்திய பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிசார் அகமத் புகார் அளித்தார்.
மோகன்ராஜ் பணி ஓய்வுபெற்ற நிலையில், புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவினர் பதிவு செய்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், மோகன்ராஜ், செல்வகுமார் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயி ரம் அபராதமும் விதித்தார். மேலும் மோகன்ராஜிடம் இருந்துரூ.50 லட்சத்தை வசூ லித்து புகார்தாரரிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.