சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், திருப்புவனம் போலீஸாரின் எஃப்ஐஆர் அடிப்படையில், அஜித்குமார் உயிரிழப்பை சிபிஐ சிறப்பு குற்றப் பிரிவு டிஎஸ்பி மோகித்குமார், கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணையை தொடங்கினார். வழக்கு தொடர்பான முழு விவரங்களை குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவிக்கும்.