க்ரைம்

புதுப்பெண் ஜெமலா தற்கொலை: உறவினர்கள் போராட்டம் - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையைச் சேர்ந்த ராபின்சன் என்பவரது மகள் ஜெமலா (26). இவரும், இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த நிதின்ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டு, அப்பகுதியிலேயே வசித்து வந்தனர்.

நிதின்ராஜிக்கு நிரந்தர பணி இல்லை. இதனால், கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் ஜெமலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஜெமலாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஜெமலாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT