திருவல்லிக்கேணியில், சூடோ எபிட்ரின் என்ற போதை பொருள் வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில், போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், திருவல்லிக்கேணி, லால்பேகம் தெரு சந்திப்பு அருகே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து, அவர்களது உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர்.
அதில், சூடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவல்லிக்கேணியை சேர்ந்த பீர் முகமது (46), சேப்பாக்கத்தை சேர்ந்த சையது ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 2 கிலோ சூடோ எபிட்ரின் போதை பொருளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.