க்ரைம்

சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடி மாணவியிடம் நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை ஐஐடியில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த மாணவி (20), தொழிற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு ஐஐடி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தின் பின்புறம் நடந்து சென்றார். அப்போது, உணவக ஊழியரான ரவுஷன் குமார் (22) என்ற இளைஞர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில், ரவுஷன் குமார் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு மருத்துவ உதவி: இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக டிஜிபிக்கு ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பிஎன்எஸ் சட்டப் பிரிவின் கீழ் நியாயமான முறையிலும், குறிப்பிட்ட அவகாசத்துக்கு உள்ளாகவும் விசாரணையை முடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ, மனநல உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT