கோவை: கோவை விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த சிகரெட் மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து இன்று கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணிகள் வழக்கமான சோதனையை முடித்து வெளியறிக்கொண்டிருந்தனர். மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட பயணியின் உடைமையை தீவிரமாக சோதனை செய்ததில் அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் மற்றும் 17 ஆப்பிள் மொபைல் போன்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது.
சுங்கவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பயணி திருச்சி கிளியூர் ஊராட்சியை சேர்ந்த வின்சென்ட் ராஜ் என்பதும் மேற்குறிப்பிட்ட பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்து பயணியை கைது செய்தனர்.