க்ரைம்

திருக்கழுகுன்றம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது

செய்திப்பிரிவு

திருக்கழுகுன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த இருளர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 17 வயது சிறுமி திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், வேலை முடித்ததும், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்கிற விஜய் ஆட்டோவில் அழைத்து வருவார் எனக் கூறப்படுகிறது. வழக்கம்போல் கடந்த 18-ம் தேதி இரவு 8 மணியளவில் சிறுமியை அழைத்து வந்துள்ளார்.

அப்போது, இரும்புலி ஏரிக்கரை பகுதிக்கு வந்தவுடன் ஆட்டோவை நிறுத்தி விட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி பெற்றோருடன் திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். திருக்கழுகுன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து, விஜய் என்கிற பெரியசாமியை கைது செய்த திருக்கழுகுன்றம் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT