க்ரைம்

திருத்தணியில் பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவி வாக்குமூலம் - போக்சோவில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முட்புதருக்குள் வீசியது நான் பெற்றெடுத்த பச்சிளம் பெண் குழந்தை தான் என்று 10-ம் வகுப்பு மாணவி போலீ ஸாரிடம் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முட்புதருக்குள் கடந்த 11-ம் தேதி அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டு பொதுமக் கள் சென்று பார்த்தபோது தொப் புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தையை யாரோ வீசி சென் றது தெரியவந்தது. அக்குழந் தையை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்து வமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள் ளூர் குழந்தைகள் நல காப்பகத் தில் அனுமதிக்கப்பட்டது.

போலீஸார் விசாரணை: விசாரணை நடத்திய நிலையில், ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு வழங் கியுள்ளார். அதில், 'வங்கனூர் காலனியைச் சேர்ந்த மணி என் பவரின் மகன் கருணாவை(23) காதலித்து கர்ப்பமானேன்.

குழந்தை பெற்றெடுக்க திருத் தணி அரசு மருத்துவமனைக்கு செல்ல முயன்றேன். வயது குறைவாக இருப்பதால், மருத் துவர்கள் அனுமதிக்க மாட்டார் கள் என்று தெரிந்து மருத்துவ மனை கழிப்பறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்து வீட் டுக்கு பயந்து அருகில் இருந்த முட்புதரில் வைத்து விட்டேன்" என கூறியுள்ளார்.

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தந்தையான கருணாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

SCROLL FOR NEXT