சுந்தரவேல் 
க்ரைம்

விருத்தாசலம் | 80 வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்தவரை சுட்டுப் பிடித்த போலீஸார்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் பண்​ருட்​டியை அடுத்த தராசு கிராமத்​தைச் சேர்ந்​தவர் கவுசல்யா (80). இவர், நேற்று முன்தினம் மாலை​யில் புல​வனூர் சாலை​யில் நடைப​யிற்சி மேற்​கொண்​டிருந்​த​போது, அங்கு மது அருந்​திக் கொண்​டிருந்த 2 இளைஞர்​கள் மூதாட்​டியை சவுக்​குத் தோப்புக்​குள் இழுத்துச் சென்​று, அவரை பாலியல் வன்​கொடுமை செய்​து, அவர் அணிந்திருந்த நகைகளை​யும் பறித்​துக் கொண்டு தப்​பியோடி​னர்.

சவுக்​குத் தோப்​பில் மயங்​கிய நிலை​யில் இருந்த மூதாட்டியை அப்​பகு​தி​யினர் மீட்​டு, கடலூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனையில் சேர்த்தனர். கடலூர் மாவட்ட எஸ்​.பி. உத்​தர​வின்​பேரில், ஆய்​வாளர் வேலுமணி தலை​மை​யில் தனிப்​படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தில் தொடர்​புடைய ஒருவர் மேல்​மாம்பட்​டில் ஒரு முந்​திரி தோப்பில் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீஸாருக்கு தகவல்கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்றுகாலை அங்கு சென்ற போலீஸார், பண்​ருட்டி எஸ்​.கே. பாளை​யத்​தைச் சேர்ந்த சுந்தர​வேல் (25) என்​பவரைப் பிடிக்க முயன்​றனர். அப்போது அவர், வீச்​சரி​வாளால் காவலர் குபேந்​திரனின் வலது கையில் வெட்​டி​விட்​டு, மற்றொரு காவலர் ஹரிஹரனை வெட்ட முயற்​சித்​தார். உடனே, ஆய்​வாளர் வேலுமணி, துப்​பாக்​கி​யால் சுந்​தர​ வேலுவை சுட்​டுப் பிடித்​தார். காயமடைந்த காவலர் குபேந்​திரன் பண்​ருட்டி அரசு மருத்​து ​வ​மனை​யிலும், சுந்​தர​வேல் முண்​டி​யாம்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யிலும் சேர்க்​கப்​பட்​டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கூறும்போது, “மூதாட்டியை வன்புணர்வு செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதை சுந்தரவேல் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.இதற்கிடையே, மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT