பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள். 
க்ரைம்

கீழக்கரையில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்: சுங்கத்துறை நடவடிக்கை

எஸ். முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 40 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்ப உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கீழக்கரை பேருந்துநிலையத்திலிருந்து கடற்கரை செல்லும் சாலையில் சுங்கததுறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது கடற்ரை நோக்கி ஸ்கூட்டரில் வந்த இருவர் சுங்கத்துறையினரை பார்த்ததும் ஸ்கூட்டரை விட்டு விட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து ஸ்கூட்டரை சோதனையிட்டபோது பொட்டலங்களில் 40 கிலோ கஞ்சா இருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கூட்டர் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், தப்பி சென்ற கடத்தல்காரர்கள் குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT