கோப்புப் படம் 
க்ரைம்

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மெரைன் போலீஸார் அந்த உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஆணுக்கு சுமார் 60 வயது இருக்கும். இது குறித்து மெரைன் போலீஸார் வழக்குப் பதிந்து கரை ஒதுங்கியவர் யார்? அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

SCROLL FOR NEXT