சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே நெடுஞ்சாலையில் நேற்று சென்ற கார், திடீரென நிலை தடுமாறி, சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த கர்நாடகாவைச் சேர்ந் ராணா ராம், ஜோகா ராம், ஜோத்தி தேவி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் இருந்த ஜோகாதேவி, ஜோத்தா ராம், அம்மியா,மற்றொரு ஜோகா தேவி ஆகியோர் பலத்த காயமடைந்து,வாழப்பாடி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு ஜோகா தேவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸார்,விபத்தில் உயிரிழந்த நால்வரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.