க்ரைம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு கருத்து: புனே சட்டக் கல்லூரி மாணவி கைது 

வெற்றி மயிலோன்

புனே: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்கு பதிலளிக்கும் போது அவமதிப்பு கருத்துகளை தெரிவித்ததாக ஷர்மிஸ்தா பனோலி எனும் புனே சட்டக்கல்லூரி மாணவி குருகிராமில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து இழிவான கருத்துகளை தெரிவித்ததற்காக புனே சட்ட மாணவி ஷர்மிஸ்தா பனோலி குருகிராமில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். புனே மாணவி வெளியிட்ட அந்த வீடியோ வைரலாகி கடும் சீற்றத்தை உருவாக்கியது. இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொல்கத்தா காவல்துறையால் பனோலி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பனோலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டதால், அவருக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்ப பலமுறை முயற்சி எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததன் அடிப்படையில் அவர் குருகிராமில் கைது செய்யப்பட்டார்.

இந்த சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், பனோலி சமூக ஊடகங்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தனது வீடியோக்கள் மற்றும் பதிவுகளை நீக்கினார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நான் இதன் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்ன எழுதப்பட்டதோ அது எனது தனிப்பட்ட உணர்வுகள், நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த விரும்பவில்லை, எனவே யாராவது காயமடைந்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். எனக்கான ஒத்துழைப்பையும், புரிதலையும் எதிர்பார்க்கிறேன். இனிமேல், எனது பொதுப் பதிவில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். மீண்டும், தயவுசெய்து எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT