க்ரைம்

ஆவடி: இணையதள மோசடியில் மக்கள் இழந்த ரூ.20.55 லட்சம் மீட்பு

இரா.நாகராஜன்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இணையதள மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.20.55 லட்சத்தை போலீஸார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், ‘ஆன்லைன்’ மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் இணையதள மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படை யில், வழக்குப் பதிவு செய்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார், பொதுமக்கள் பணம் செலுத்திய மோசடி கும்பலின் வங்கிக் கணக்குக ளை அடையாளம் கண்டனர்.

தொடர்ந்து, அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் உள்ள வங்கி கிளைகளுக்கு கடிதம் கொடுத்ததன் பேரில், மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, மோசடி நபர்களிடம் பொதுமக்கள் இழந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பணத்தை இழந்த 6 பேருக்கு, ரூ.20.55 லட்சத்தை ஆன்லைன் மூலம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். அதற்கான சான்றிதழ்களை இன்று ஆவடி காவல் ஆணையரக அலுவலக த்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் வழங்கினார்.

மேலும், இம்மாதம் 4 இணையதள மோசடி வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1.40 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT