ராமேசுவரம்: இலங்கையில் கரை ஒதுங்கிய இந்தியப் படகிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையில், காலியில் (Galle) உள்ள கடற்கரைப் பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று (திங்கட்கிழமை) இன்று காலையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய அந்தப் படகில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காலி போலீஸார், படகில் இருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் யார்? என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.