க்ரைம்

சென்னை: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - 3 வயது பெண் குழந்தையுடன் தாய் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், 3 வயது பெண் குழந்தையும், தாயும் உயிரிழந்தனர்.

தியாகராய நகர் பர்கிட் சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், தனது மனைவி பிரியங்கா (37) மற்றும் 3 வயது பெண் குழந்தை கரோலன் தியா (3) ஆகியோருடன் நேற்று சிறுவா புரி முருகன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பாடி மேம்பாலம் அருகே செல்லும் போது பின்னால் வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பிரியங்கா, கரோலி ன் தியா மீது லாரியின் சக்கரம் ஏறியது.

பலத்த காயமடைந்த பிரியங்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை கரோலின் மீட்கப்பட்டு, அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிறிது நேரத்தில் கரோலின் இறந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பிய சரவணன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் ஜெயக் குமாரை (34) கைது செய்தனர்.

SCROLL FOR NEXT