க்ரைம்

நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற கப்பலில் போதைப் பொருள் கடத்திய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

நாகையில் இருந்து இலங்கை சென்ற பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்திய இளைஞரை அந்நாட்டு சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

நாகையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்தது. அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகளை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், சென்னையைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரிடம் 'குஷ்' என்ற போதைப் பொருள் 4 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவரை காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கி 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், 100-வது நாளில் பயணி ஒருவரால் போதைப் பொருள் கடத்திச் செல்லப்பட்டுள்ளது கப்பல் நிர்வாகம் மற்றும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT