சென்னை: வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருள் விற்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை டிபிகே தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் வண்ணாரப்பேட்டை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் செல்வி (38) என்ற பெண் மாவா புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 1.6 கிலோ மாவா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.