க்ரைம்

மதுராந்தகம் அருகே உறவினர்களால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர் 

கோ.கார்த்திக்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை, உறவினர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்(25). அதே கிராமத்தை சேர்ந்த அப்பு (24) என்கிற உதயா மற்றும் திவாகர்(23) ஆகிய மூவரும் உறவினர்கள். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு மேற்கண்ட நபர்களான மூவரும் புதுப்பட்டு பகுதியில் மறைவான ஒரு இடத்தில் மது அருந்தியதாகவும் அப்போது, லோகேசுக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தவைத்து பின்னர், உடன் சென்ற இருவரும் இரும்புக் கம்பியால் சரமாக அவரை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மதுராந்தகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT