க்ரைம்

செனாய் நகரில் 8 பேரை விரட்டி கடித்த நாய்: காவல் துறையில் புகார் கொடுத்த மக்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை செனாய் நகரில் 8 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய் குறித்து காவல் துறையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரை தொடர்ந்து நாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

சென்னையில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்கள் முதல் தெரு நாய்கள் வரை சாலையில் செல்பவர்களை துரத்தி, கடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் செனாய் நகர் அருணாச்சலம் தெருவில், நடந்து செல்பவர்களை தெரு நாய்கள் கடித்து வருவதாகவும், அதில் குட்டிகளை ஈன்ற தாய் நாய் ஒன்று இதுவரை 8 பேரை கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செனாய் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடித்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT