க்ரைம்

மேட்டூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக விசிக நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து கொளத்தூர் வழியாக வெள்ளகரட்டூர் பகுதிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை கொளத்தூர் காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் பேருந்து மீது உரசிச் சென்று சற்று தூரத்தில் நின்றது. காரில் இருந்து இறங்கி வந்த கொளத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் சண்முகம் (40) பேருந்து ஓட்டுநரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கி மிரட்டினார். தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த கொளத்தூர் போலீஸார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் (52) அளித்த புகாரின்பேரில், சண்முகத்தை போலீஸார் கைது செய்தனர். அரசுப் பேருந்து ஓட்டுநரை சட்டையை பிடித்து மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT