க்ரைம்

கூடலூர் சிறையில் கைதியை தாக்கிய 6 காவலர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் என்பவர், அங்குள்ள கிளைச் சிறையில் சில நாட்களுக்கு முன்பு அடைக்கப்பட்டார். இந்நிலையில், நிஜாமுதீனுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறைக் காவலர்கள் நிஜாமுதீனைத் தாக்கியுள்ளனர். இதில் நிஜாமுதீனின் கைகளில் முறிவு ஏற்பட்டது. நிஜாமுதீன் பலத்த காயங்களுடன் சிறையில் இருப்பதாக, அவரின் உறவினர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், கூடலூர் மாஜிஸ்திரேட், வட்டாட்சியர் முத்துமாரி, உதவி காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் அடங்கிய குழுவினர் கூடலூர் கிளைச் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களஅ கைதி நிஜாமுதீன் தாக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

விசாரணை குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கூடலூர் கிளைச் சிறையில் பணியாற்றிய காவலர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், துறை ரீதியான நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT