பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தையடுத்து பள்ளியின் வாயிலில் திரண்ட பெற்றோர். | படம்: மு.லெட்சுமி அருண் | 
க்ரைம்

பாளையங்கோட்டை தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி / சென்​னை: பாளையங்கோட்டை தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டினார். இதைத் தடுத்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு நேற்று 8-ம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவர் திடீரென தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அருகிலிருந்த சக மாணவரை வெட்டியுள்ளார்.

அங்கிருந்த மாணவ, மாணவிகள் சப்தம்போடவே ஆசிரியை ஓடி வந்து தடுத்துள்ளார். அப்போது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தலை, கழுத்து, கையில் வெட்டுப்பட்ட மாணவரும், காயமடைந்த ஆசிரியையும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் போலீஸார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பென்சில் கொடுப்பது தொடர்பாக இரு மாணவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, சக மாணவரை அரிவாளால் வெட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவரை போலீஸார் பிடித்து, குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த மாணவரிடமும், வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதால், பெற்றோர் திரண்டனர். பள்ளி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் கூறும்போது, “பென்சில் தொடர்பாக இரு மாணவர்களிடம் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணம். காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாளால் வெட்டிய மாணவரிடம், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம். அவரும் ஒரு குழந்தைதானே” என்றார். இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சிவக்குமாரும் பள்ளியில் நேற்று மாலை விசாரணை மேற்கொண்டார்.

தலை​வர்​கள்​ கண்​டனம்​: தனி​யார்​ பள்​ளி வகுப்​பறை​யில்​ 8-ம்​ வகுப்​பு மாணவரை, சக மாணவர்​ அரி​வாளால்​ வெட்​டி​யுள்​ள சம்​பவத்​துக்​கு அரசி​யல்​ தலை​வர்​கள்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​. இது தொடர்​பாக தமிழக பாஜக தலை​வர்​ நயி​னார்​ நாகேந்​திரன்​ வெளி​யிட்​டுள்​ள அறிக்​கை​யில்​, “பள்​ளிச்​ சிறு​வர்​கள்​ கைகளி​லும்​ ஆயுதங்​கள்​ புழங்​கும்​ அளவுக்​கு தமிழகத்​தின்​ சட்​டம்​-ஒழுங்​கு சீர்​குலைந்​துகிடப்​பது ஆபத்​தானது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

இதே​போல,பாமக தலை​வர்​ அன்​புமணி, அமமுக பொதுச்​ செய​லா​ளர்​ டிடி​வி.​தினகரன்​, தமா​கா தலை​வர்​ ஜி.கே.​வாசன்​, தேமு​தி​க பொதுச்​செய​லா​ளர்​ பிரேமல​தா, தமமுக தலை​வர்​ ஜான்​ பாண்​டியன்​ உள்​ளிட்​டோரும்​ கண்​டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT