திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூரில் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த தனியார் நிறுவனத்துக்கு லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வர வேண்டிய 39 டன் எடை கொண்ட 1,305 வெள்ளி பார்கள், 2 கன்டெய்னர்களில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப் பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு கடந்த மாதம் 30ம் தேதி வந்தடைந்தது. அந்த வெள்ளி பார்கள், சென் னை. தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறு வனம் மூலம் 2 கன்டெய்னர் லாரிகள் மூலம் கடந்த 3ம் தேதி மண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்தது.
அப்போது. நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில், 1,305 வெள்ளி பார்களில், ரூ. 8.96 கோடி மதிப்புள்ள, 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி பார்கள் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து. தனியார் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கின் அதிகாரியான தாசரி ஸ்ரீஹரி ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், காட்டூர் போலீஸார் விசாரணை செய்தனர்.
இந்நிலையில், தனியார் துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வந்த ராயபுரத்தைச் சேர்ந்த எபினேஷ், கடப்பாக்கத் தைச் சேர்ந்த நவீன்குமார். ஓட்டுநர்கள் எர்ணாவூரை சேர்ந்த சந் தோஷ், மன்னார்குடியை சேர்ந்த ஆகாஷ். நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ். ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த தேசிங். பழவேற்காட்டைச் சேர்ந்த குணசீலன் ஆகிய 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.