தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட கீர்த்திகா. (அடுத்த படம்) உடலை வாங்க மறுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார். | படம்: ஆர்.வெங்கடேஷ் | 
க்ரைம்

சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து காவல் நிலையம் முன் விஷமருந்திய இளம்பெண் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: சகோ​தரரை போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றதைக் கண்​டித்து காவல் நிலை​யம் முன் விஷமருந்​திய சகோ​தரி​கள் 2 பேரில் ஒரு​வர் நேற்று சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் போராட்டத்​தில் ஈடுபட்​டனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் நடுக்​கா​வேரியைச் சேர்ந்​தவர் அய்​யா​வு. கள்​ளச்​சந்​தை​யில் மது விற்​பனை செய்து வந்​துள்​ளார். இவரது மகன் தினேஷ்(32), மகள்​கள் மேன​கா(31), கீர்த்​தி​கா(29). தினேஷ் மீது 10-க்​கும் அதி​க​மான வழக்​கு​கள் உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதனிடையே, அண்​மை​யில் அய்​யா​வுவை அப்​பகு​தி​யைச் சேர்ந்த சிலர் அணுகி, கள்​ளச்​சந்​தை​யில் மது​பானம் விற்​றுத் தரு​மாறு கேட்​டுள்​ளனர். அவர்​களை தினேஷ் கண்​டித்​துள்​ளார். இதனால் இரு தரப்​பினருக்​கிடையே கைகலப்பு நேரிட்​டுள்​ளது. அப்​போது, தினேஷ் ஆயுதங்​களால் அவர்​களைத் தாக்​கி, மிரட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக நடுக்​கா​வேரி காவல் ஆய்​வாளர் சர்​மிளா மற்​றும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் தினேஷை விசா​ரணைக்​காக காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அப்​போது, தினேஷின் சகோ​தரி மேன​கா, தனக்கு நிச்​சய​தார்த்​தம் நடை​பெற​விருப்​ப​தால் தினேஷை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்ல வேண்​டாம் என போலீ​ஸாரிடம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். ஆனால், போலீ​ஸார் தினேஷை அழைத்​துச் சென்று வழக்​குப் பதிவு செய்​து, புதுக்​கோட்டை சிறை​யில் அடைத்​தனர்.

இதைக் கண்​டித்து அன்று மாலை தினேஷின் சகோ​தரி​கள் 2 பேரும் நடுக்​கா​வேரி காவல் நிலை​யம் முன்பு விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​றனர். இதையறிந்த போலீ​ஸார் 2 பேரை​யும் மீட்​டு, தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். இந்​நிலை​யில், கீர்த்​திகா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்​தார். மேனகா தீவிர சிகிச்​சை​யில் உள்ளார்.

தகவலறிந்த உறவினர்​கள் 100-க்​கும் அதி​க​மானோர் மருத்​து​வக் கல்​லுாரி மருத்​து​வ​மனை​யில் திரண்​டு, கீர்த்​திகா உயி​ரிழப்​புக்கு காவல் ஆய்​வாளர் சர்​மிளா​தான் காரணம் என்று குற்​றம்​சாட்​டி, அவரைப் பணி​யிடை நீக்​கம் செய்ய வேண்​டும் என முழக்​கமிட்​டனர்.

மேலும், கீர்த்​தி​கா​வின் உடலை வாங்க மறுத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​களிடம் தஞ்​சாவூர் டிஎஸ்பி சோமசுந்​தரம் மற்​றும் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். உயி​ரிழந்த கீர்த்​திகா பி.இ. படித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT