ஷர்​மிளா தாபா 
க்ரைம்

நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: சின்னத்திரை நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா தாபா சென்னையில் தங்கி தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, திரைப்படத்துறைக்கு வந்தார். தொடர்ந்து விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில் ஷர்மிளா தாப்பா, பாஸ்போர்ட் காலாவதி ஆன நிலையில் மீண்டும் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில், அண்ணா நகர் முகவரியை ஆவணமாக கொடுத்திருந்தார். அதில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக உள் துறை அமைச்சகம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தது.

அந்த புகாரில், நேபாளத்தை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த புகாரில் அடிப்படையில் நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT