நாக்பூர்: திருமணமானதை மறைத்து வாட்ஸ்அப் மூலம் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உறவு வைத்து ஏமாற்றிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
நாக்பூரைச் சேர்ந்தவர் அப்துல் ஷாரிக் குரேஷி (33). இவர் திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வருகிறார். இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் பல பெண்களுடன் பழகிவந்துள்ளார். தனக்கு மனைவி மற்றும் குழந்தை இருப்பதை அவர்களிடம் இருந்து மறைத்துள்ளார்.
மேலும், தான் பழகிய பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலபேரின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் அப்துல்.
தனது கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி அவரின் வாட்ஸ்அப் அக்கவுண்டை ஹேக் செய்து சாட், வீடியோக்கள், புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போதுதான் தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பதை அவர் தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி தொடர்பிலிருந்த அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்ததும் அபோதுதான் தெரியவந்தது.
பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த தனது கணவருக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த அவரது மனைவி வாட்ஸ்அப் ஆதாரங்களுடன் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அப்துலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.