குன்னூர் சாலையில் காரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர் 
க்ரைம்

குன்னூர் சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் காட்டேரி அருகே சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி அருகே 4-வது கொண்டை ஊசி வளைவில் இன்று (மார்ச் 31) மாலை கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.இதை பார்த்தவுடன் கார்கள் பயணம் செய்தவர்கள் பலரை எடுத்து வெளியே ஓடி வந்தனர். மேலும் இங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறை தகவல் அளித்தனர்.

தீ விபத்து காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவலின் பேரில் உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது கார் பற்றி எரிந்துக் கொண்டிருந்தது தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. ஆனால், கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. தீ அணைக்கப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் போக்குவரத்து சீரானது.

SCROLL FOR NEXT