க்ரைம்

கள்ள சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை - சேப்பாக்கம் பகுதியில் 25 பேர் கைது

செய்திப்பிரிவு

கள்ள சந்தையில் ஐபிஎல் டிக்கெட்களை விற்பனை செய்த 25 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனால், ஐபிஎல் டிக்கெட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதை திருவல்லிக்கேணி போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது, பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்கள் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 25 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 48 டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT