க்ரைம்

விருத்தாசலத்தில் பள்ளிச் சிறுமிகளை கடத்திய சிறுவன் கைது

செய்திப்பிரிவு

விருத்தாசலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 11 மற்றும் 12 வயதுடையை சிறுமிகள் 2 பேர் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முறையே 6, 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த சிறுமிகள் கடந்த 24-ம் தேதி பள்ளிக்குச் சென்ற நிலையில் அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் உளுந்தூர்பேட்டையில் உள்ள சிறுவனை நேற்று கைதுசெய்து, சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT