பாஸ்கர் 
க்ரைம்

சென்னை | அடுத்​தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்​சம் மோசடி: முதி​ய​வர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அடுத்தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன்(51). வில்லிவாக்கம் சிட்கோ நகர் 1-வது மெயின் ரோட்டில் தங்க நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 17-ம் தேதி கடையில் இருந்தபோது, அவருக்கு தெரிந்த நபரான ஏற்கனவே பல தடவை தங்க நகைகள் அடகு வைத்துள்ள வில்லிவாக்கம், செங்குன்றம் சாலை 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர்(61) என்பவர் கடைக்கு வந்தார்.

வந்தவர் 38.5 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்கள் மற்றும் விநாயகர் டாலரை அடகு வைத்து பணம் கேட்டார். நகைகள் மீது சந்தேகம் கொண்ட வெங்கடேசன் சந்தேகத்தின்பேரில், அவர் கொடுத்த தங்க நகைகளை பரிசோதனை செய்தபோது, அது போலி நகைகள் என தெரியவந்தது. இதையடுத்து, கடை பணியாளர்களுடன் சேர்ந்து பாஸ்கரை பிடித்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், பிடிபட்ட பாஸ்கர் ஏற்கெனவே 11 தடவை தங்க நகைகள் என போலியான நகைகளை அடகு வைத்து, மொத்தம் ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் பெற்று மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 245 கிராம் எடை கொண்ட போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT