கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில், போக்சோ பிரிவில் ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. இத்தேர்வு மைய மேற்பார்வையாளர் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் (44) பணியில் இருந்தார். அப்போது, தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு, ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.