க்ரைம்

சென்னை | ஆட்டோ ஓட்டுநர்களுக்கிடையே மோதல்: தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஹரிஹரன் (21). இவர் பெரம்பூர் ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் அவரது ஆட்டோவை நிறுத்தி வரிசைப்படி சவாரி ஏற்றிச்சென்று வந்துள்ளார். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (24) உட்பட இருவர் வரிசையில் ஆட்டோவை நிறுத்தாமல் அடிக்கடி சவாரி ஏற்றிச் சென்றுள்ளனர்.

இதனால் ஹரிஹரனுக்கும், பார்த்திபன் தரப்பினருக்கும் சவாரி ஏற்றுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு ஹரிஹரன் மூலக்கடை ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பார்த்திபன் உள்ளிட்ட 5 பேர் ஹரிஹரனிடம் வீண் தகராறு செய்து சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், கத்தியாலும் குத்த முயன்றுள்ளனர். நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.

ஹரிஹரன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பார்த்திபன், அவரது கூட்டாளிகள் செங்குன்றம் சஞ்சய் குமார் (26), அதே பகுதி சரண்ராஜ் (24), வியாசர்பாடி சுந்தர் (24), ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT