க்ரைம்

கடன் வாங்கி விவசாயம் செய்ததால் நஷ்டம்: செங்குன்றத்தில் விவசாயி தற்கொலை

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: செங்குன்றம், காட்டூரை அடுத்த வேலூர் கிராமம், மேட்டு தெருவில் வசித்து வந்தவர் முத்துராஜ் (65). இவர் தனக்கு சொந்தமான நிலத் தில் விவசாயம் செய்து வந்தார். இவர், விவசாயத்துக்கு கடன் வாங்கி செலவு செய்து வந்ததாகவும் இதில் நஷ்டம் ஏற்பட்டதில் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதி காலை மனைவியிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் குளியல் அறையில் தனது மனைவியின் புடவையால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவி சுசிலா, கணவர் சென்று நீண்ட நேரம் ஆகியதால் குளியலறை சென்று பார்த்தபோது, கணவர் தூக்கு மாட் டிக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே. தனது உறவினர் மூலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துராஜின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, அவரது மகன் பகவத்சிங் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர். முத்துராஜ் அப்பகுதியின் ஆளும் கட்சியின் கிளை செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT