நாமக்கல்: குமாரபாளையம் வழியாக லாரியில் கடத்த முயன்ற 4.5 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு பள்ளி பாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி போலீஸார் சைகை காட்டியும், நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த லாரியை விரட்டிச் சென்ற போலீஸார், வளையக்காரனூர் பேருந்து நிறுத்தம் அருகே பிடித்தனர்.
தொடர்ந்து, லாரியில் சோதனையிட்டபோது, தக்காளி லோடுகளுக்கு இடையே 4.5 டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஜெலட்
டின் குச்சிகள் மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநர் பார்த்திபனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, கேரளாவுக்கு ஜெலட்டின் குச்சிகளைக் கடத்த முயன்றது தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.