க்ரைம்

ஊத்துக்குளி அருகே இளம்பெண் விபத்தில் மரணம் - போலீஸ் மீதான அதிருப்தியில் மறியல்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: ஊத்துக்குளி செங்கப்பள்ளி சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா (23). இவருக்கு மார்ச் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ம் தேதி மாலை தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் நிர்மலா சென்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிர்மலா, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து நிகழ்ந்து 4 நாட்களுக்கு மேலாகியும் விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறி, இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஊத்துக்குளியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர்.

SCROLL FOR NEXT