திருவள்ளூர்: இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ் குமார் கடந்த 2014-ம் ஆண்டு மத விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், அப்துல் ஹக்கீம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜாமீனில் வெளியே வந்த அப்துல் ஹக்கீம் தலைமறைவானார்.
அம்பத்தூர் சரக உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்த நிலையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.