க்ரைம்

விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலாளி கைது

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடியில் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் அழகப்பன் (56). இவர் அங்கு தங்கியுள்ள கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியதில், காவலாளி அழகப்பன் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் காவலாளி அழகப்பன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT