க்ரைம்

அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடையாறு, தாமோதரபுரம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (56).

இவர் அங்கு வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 19-ம் தேதி பெசன்ட் நகர் வழியாக ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச் சம்பவத்தை சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கராஜ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT