பொன்னேரி: சென்னை மணலியில் மாநகராட்சி இயற்கை எரிவாயு தயாரிப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மணலி பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் எரிவாயு தயாரிப்பு நிலையம் செயல்படுகிறது. தனியார் தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்படுத்தி வரும் இந்த நிலைய வளாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு திடீரென சிலிண்டர் வெடித்தது.
இச்சம்பவத்தில் கட்டுபாட்டு அறை ஆப்ரேட்டரான ராசிபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மீது கட்டுப்பாட்டு அறை மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இச்சம்பவத்தில் சம்பத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவரான மீஞ்சூர் அருகே உள்ள புலிக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மணலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.