க்ரைம்

கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறிய வட்டாட்சியர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் @ விருதுநகர்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேர் இன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ‌.குமாரலிங்கபுரம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே பெரியகண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் விவசாய பயன்பட்டிற்கு களிமண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன், 4 வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT