சென்னை: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு வர், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும் பகோணம் அருகேயுள்ள திரு புவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், அப்பகுதி யில் மத மாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்துள்ளார். இந் திலையில், 2019 பிப்ரவரிசம்தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன், திருமங்கலக்குடியைச் சேர்ந்த முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், அவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா, காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை குறித்து என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அப்பிரிவு அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, துப்பு துலக்க ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் என்ஐஏ அதிகாரிகளும் மேலும் பலரை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருமங்கலகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (30), அதேப் பகுதியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன் (31) ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதத்தில் 5 பேருக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது.
வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் உள்பட 18 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த முகமது அலி ஜின்னா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் என்ஐஏ போலீஸார் சென்னையில் கைது செய்தனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும் பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஏற்கெனவே என்ஐஏ அதிகாரிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை விமர்சனம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமைதிக்கு பேர் போன தமிழகம் தற்போது பழமைவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் இருவர் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கோவையில் பயங்கரவாதிக்கு போலீஸ் பாதுகாப்போடு நடத்தப்பட்ட இறுதிச் சடங்கின் மூலம், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு வங்கி அரசியல் எந்த அளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்துகிறது. பல்வேறு பிரச்சினைகளின்போது நேரில் செல்லாத முதல்வர் ஸ்டாலின், தற்போது டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் சென்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்