க்ரைம்

பங்கு வர்த்தக சைபர் மோசடி: ரூ.15 கோடி சுருட்டியவர் பிஹாரில் கைது

செய்திப்பிரிவு

தானே: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் வசிக்கும் ஒருவரிடம், ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூ.14 கோடியே 88 லட்சத்து 91,665-ஐ மோசடி கும்பல் பறித்து விட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் நவி மும்பை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி பிஹார் மாநிலம் ககாரியா பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுஜித்குமார் மதன்குமார் சிங் என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து சைபர் போலீஸ் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் கதாம் நேற்று கூறுகையில், “கைது செய்யப்பட்ட சுஜித்குமார் கம்போடியாவில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்துள்ளார். கம்போடியாவில் உள்ள கும்பலுக்கு இங்கிருந்து சிம் கார்டுகளை வாங்கி அனுப்பி உள்ளார். அதன்மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT