க்ரைம்

புழல் சிறை பெண் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இரா.நாகராஜன்

செங்குன்றம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை பெண் கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வபெருமாள் நகரை சேர்ந்தவர் ராணி (66). இவர் மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆவடி காவல் ஆணையரக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் நெஞ்சு வலி உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டிருந்த ராணியின் உடல்நிலை, சிறையில் மேலும் மோசமானது என தெரிகிறது.

இந்நிலையில், ராணியின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் கடந்த 7-ம் தேதி சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ராணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT